பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு !
வேலூர், மார்ச் 7-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சி 36 வார்டுகளை கொண்டது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் நகரப் பகுதியில் வணிக வளாகங்கள் , மளிகை கடைகள், ஜூஸ் கடைகள், இறைச்சி கடைகள் என நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இவைகளில் பொது சுகாதாரம், நெகிழி பயன்பாடு, உணவு தரம்,இவைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சுகாதார ஆய்வாளர் அரசு சம்பளத்தில் வருமானம் போதவில்லை என்பதால் அரசின் சட்ட விதிகளுக்கு எதிராகவும், அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்து வருகிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் பிப்ரவரி 1-ஆம் தேதி அன்று தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு நகரம் முழுவதும் இருக்கும் இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தும் இந்த உத்தரவை சிறிதும் நடைமுறைப்படுத்தாமல் ஒவ்வொரு இறைச்சி கடைக்கும் தலா ரூ. 1000 முதல் ரூ. 2000 வரை என மிகப்பெரிய வசூல் வேட்டையை சுகாதார ஆய்வாளர் நடத்தி முடித்தார் எனவும் இறைச்சி கடைகள் ஆங்காங்கே செயல்படுவது குறித்து பொதுமக்கள் புகைப்படத்துடன் தொலைபேசியில் புகார் செய்ய தொடர்பு கொண்ட போதும் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என பொதுமக்கள் புகாராக கூறினர். இவரின் செயல்பாடுகள் குறித்து நகராட்சி அலுவலகம்,பொதுமக்களிடம் விசாரித்த போது பெயர் கூற விரும்பதாவர்கள் மிக அதிர்ச்சியான தகவல்களை கூறினார்கள். நகரில் உள்ள பிரபலமான பெரிய ஜூஸ் கடைகளில் ஆய்வுகள் என்ற போர்வையில் ரூ. 5000 முதல் 10000 வரை வசூல் செய்வதாகவும், நெகிழி பயன்பாடு உள்ள கடைகளில் நெகிழிப் பைகளை கண்டெடுத்து அபராத தொகையாக மார்க்கெட் பகுதியில் ரூ. 15 ஆயிரம் வரை வசூல் செய்து அபராதத்திற்கான ஒப்புதல் சீட்டு வழங்காமலேயே கடந்த காலங்களில் வசூல் வேட்டை நடத்தினார் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இது போன்ற செயல்களிலே அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கூறினர். நகராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை வேதனையில் கொடுத்து வரும் இவரின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்திட வேலூர் மாவட்ட நகராட்சிகள் மண்டல இணை இயக்குனரும், வேலூர் மாவட்ட ஆட்சியரும் குடியாத்தம் நகராட்சியில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளரை துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது .














Leave a Reply