செய்யாறு, மார்ச் 6-
செய்யாறில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க., கட்சியில் ‘அங்கம்’ வகித்து வரும், தற்போதைய நகர செயலாளர் விஸ்வநாதன் ( 64 ) . 2026 சட்டசபை தேர்தலில் செய்யாறு தொகுதிக்கு வேட்பாளராக ‘டிக்கெட்’ கேட்டு விருப்ப மனுவை தாக்கல் செய்து உள்ளார். செய்யாறு நகரில் அனைவருக்கும் ‘பரிட்சயமானவர்’ வழக்கறிஞர் விசுவநாதன். இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தலில் போது திருவத்திபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டில் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்பொழுது திருவத்திபுரம் நகராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 27 கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து, நகர மன்ற தலைவரை தேர்வு செய்யும் முறை அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு முன்பு தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 கவுன்சிலர்கள்
ஒருமனதாக தி.மு.க.,வைச் சேர்ந்த ஒருவரை நகர மன்ற தலைவராக தேர்வு செய்ய காத்திருந்தனர்.
அப்பொழுது தி.மு.க.,வின் மேலிடம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. செய்யாறு நகர மன்ற தலைவராக ‘விஸ்வநாதனையும்’, துணைத் தலைவராக 7வது வார்டை சேர்ந்த ‘பேபிராணி பாபு’ என்பவரை துணைத் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என, உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மேலிடத்தின் உத்தரவை மீறி வேறு இருவரை தேர்ந்தெடுக் கப்பட்டதால், விஸ்வநாதனுக்கு நகர மன்ற தலைவர் பதவி கைக்கூடவில்லை. அப்பொழுது இவருக்கு இரண்டு மாதங்களில் தி.மு.க.,வில் செய்யார் நகர செயலாளர் பதவி கட்சி சார்பில் வழங்கப்பட்டது. இந்தப் பதவியில் விசுவநாதன் இன்று வரையிலும் தொடர்கிறார். பல்வேறு பணி கட்சிக்காக ஆற்றி வருகிறார். இவருக்கு செய்யாறு நகரில் ‘பெரிய இளைஞர் பட்டாளமே’ இருந்து வருகிறது. இவர் சொல்லும் வேலைகளை அந்த இளைஞர்கள் உடனடியாக செய்து முடிக்கும் தருவாயில் உள்ளனர். முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த இவருக்கு செய்யாறு தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடம் ‘டிக்கெட்’ கொடுத்தால், இவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமைந்துவிடும் என்பது தொகுதி மக்களின் கருத்தாகவே இருந்து வருகிறது.











Leave a Reply