கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மலுமாச்சம்பட்டி ஊராட்சியில் பல்வேறு வார்டுகளில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பாக கற்பக வளநகர் பகுதியில் தார் சாலை பயன்படுத்த பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசு அதிகாரிகளின் முயற்சியால் கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி வழிகாட்டுதலின்படி கோவை மாவட்ட ஊராட்சிகளின் இணை இயக்குனர் யோசனையின் பெயரில் மக்களுக்கு பயன்ப்டும் வகையில் நல்ல தார் சாலை அமைத்துக் கொடுத்த தமிழக அரசுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் அத்துறையைச் சார்ந்த அதிகாரிகளுக்கும், மேலும் ஊராட்சியின் செயலாளர் கார்த்தி அவர்களுக்கும் அப்பகுதி மக்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து அவர்கள் அப்பகுதிக்கு செய்த நன்மைகளை குறித்த விளக்கங்களை பதாகைகளை வைத்து அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.மேலும் இதுபோல மக்களுக்கு பயன்படும் திட்டங்களை கோவை மாவட்ட ஆட்சியர் நிச்சயம் நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கையில் என்றென்றைக்கும் உள்ளதாக மலுமாச்சம்பட்டி ஊராட்சி மக்கள் தெரிவித்தனர்.













Leave a Reply