சீரடியில் நடந்த தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் காஞ்சிபுரம்  ஸ்ரீ லட்சுமி குளோபல் பள்ளி மாணவன் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று அசத்தல்!

வேலூர், மார்ச் 3-
புட்டபர்த்தி சீரடியில் தேசிய அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் ஸ்ரீ லட்சுமி குளோபல் பள்ளியைச் சேர்ந்த ஐந்து வயது மாணவன் ஸ்ரீ குருதேவ் கலந்துகொண்டு மூன்று தங்கப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மூன்று தங்கப் பதக்கங்களை வென்று காஞ்சிபுரத்துக்கு திரும்பிய ஸ்ரீ குருதேவுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் சார்பில் வானவேடிக்கை வெடித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது .
நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு பெற்றோர்கள் சதீஷ் -சுஜாதா தம்பதியினர் மனமார்ந்த நன்றியை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.