செய்யாறு சட்டசபை தொகுதிக்கு பொறுப்பாளர்கள் – நிர்வாகிகள் ஆதரவுடன்

தி.மு.க.வில் விருப்ப மனுவை தாக்க செய்தார்

மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே.கார்த்திகேயன் !

செய்யாறு, மார்ச் 3 –
மக்களிடம் செல்வாக்கு இருப்பவர்கள் தான் 2026 சட்டசபை தேர்தலில் கனிசமான வாக்குகளை பெற்று, வெற்றி பெறுவார்கள் என, பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் செய்யாறு சட்டசபை தொகுதியில் எந்தப் பக்கம் திரும்பினாலும் தி.மு.க.,வின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி குழுக்கள் என, பெரிய பட்டாளமே, ஏழாச்சேரியை சேர்ந்த மாவட்ட அயலக அணி துணைத் தலைவர்
எம்.கே.
கார்த்திகேயனுக்கு ‘பெரிய ஆதரவு’ கொடுத்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்டது செய்யார் சட்டசபை தொகுதி. இந்தத் தொகுதியில் வன்னியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். தி.மு.க., – அ.தி.மு.க., கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் யாரை ‘களத்தில் இறக்கினாலும்’ அவர்கள் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் இருப்பார்கள். இவர்கள் தான் செய்யார் சட்டசபை தொகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அந்தந்த காலகட்டத்தில் மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்கள் தான், தேர்தலின் போது கனிசமான வாக்குகளை வாங்கி சட்டசபைக்கு உறுப்பினராக அனுப்பி வைக்கப்படும் முறை இன்று வரையிலும் தொடர்கிறது.

தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை தொகுதி மக்கள், 5 ஆண்டுகளின் இவரது செயல்பாடு – அனுகுமுறை – பேசும்படி அளவுக்கு தொகுதிக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என, கண்காணித்து வருகின்றனர். ஆனால், செய்யார் தொகுதி மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு எந்த சட்டமன்ற உறுப்பினரும் 2வது முறையாக தேர்வு செய்யும் அளவுக்கு திருப்திகரமாக இல்லை என, மக்களால் இறுதி கட்டத்தில் முடிவு எடுப்பதையும் – பரவலாகப் பேசப்படுவ தையும் காதுகளில் கேட்க முடிகிறது.

இந்த முறை 2026 சட்டசபை தேர்தலில் செய்யார் தொகுதியில் தி.மு.க., சார்பில் ஏழாச்சேரி கிராமத்தை சேர்ந்த எம்.கே. கார்த்திகேயனுக்கு ‘டிக்கெட்’ கொடுத்து களத்தில் இறக்கினால் மக்கள் செல்வாக்குடன் கனிசமான ஓட்டுக்களை பெற்று சுலபமாக வெற்றி பெறுவார் என, மக்களால் தேர்தலுக்கு முன்பே பேச துவங்கிவிட்டனர். இவர், தான் நேற்று விருப்ப மனு கொடுப்பதற்காக சென்னை அறிவாலயத்திற்கு தி.மு.க., தொண்டர்கள் – நிர்விகிகள் என, ‘பெரிய மக்கள் கூட்டத்துடன்’ சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.