திமுக தலைவர் மு .க. ஸ்டாலினின் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் காட்பாடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

வேலூர்,மார்ச் 2-
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு .க. ஸ்டாலினின் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் வேலூர் மாநகராட்சி துணை மேயரும், காட்பாடி தெற்கு பகுதி கழக செயலாளருமான எம் .சுனில் குமார். இதையடுத்து அண்ணா சிலைக்கு கீழ் பகுதியில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்களால் அலங்கரித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார் எம். சுனில் குமார். இதையடுத்து அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தெற்கு பகுதி கழக செயலாளரும் ,வேலூர் மாநகராட்சி துணை மேயருமான எம். சுனில் குமார் மற்றும் வடக்கு பகுதி கழக செயலாளர் வன்னிய ராஜா ஆகியோர் இணைந்து துப்புரவு பணியாளர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு புத்தாடைகள் வழங்கியும், இனிப்பு மற்றும் பிரியாணி பொட்டலங்கள் வழங்கி மு. க. ஸ்டாலினின் 73 வது பிறந்தநாள் விழாவை மிக விமரிசையாக கொண்டாடினர். இதையடுத்து சுமார் 73 கிலோ எடை கொண்ட கேக் வெட்டியும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு. க. ஸ்டாலினின் 73 வது பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த விழாவில் காட்பாடி 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, காட்பாடி, கல்புதூர் 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு, 12வது வார்டு மாமன்ற உறுப்பினரும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட தலைவருமான டீட்டா சரவணன் மற்றும் மாவட்ட பொருளாளர் நரசிம்மன் நாயுடு மற்றும் கழக பேச்சாளர் பிரம்மபுரம் பழனி, முன்னாள் காட்பாடி பேரூராட்சி கவுன்சிலர் பள்ளிக்குப்பம் ஜெய்சங்கர் மற்றும் திமுகவைச் சேர்ந்த 6வது வார்டு மாமன்ற உறுப்பினர் பழைய காட்பாடி சீனிவாசன் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் ,தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இதை தொடர்ந்து சுமார் ஆயிரம் பேருக்கு காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்குண்டான அனைத்து ஏற்பாடுகளையும் காட்பாடி தெற்கு பகுதி கழக செயலாளர், வேலூர் மாநகராட்சி துணை மேயர் எம். சுனில் குமார் தனது சொந்த செலவில் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.