தமிழ்நாடு தலைகுனியாது: வேலூரில் திமுக சார்பில்  பொதுக்கூட்டம்!

வேலூர், பிப். 25-
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் வேலூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது.
வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம் எல் ஏ தலைமை வகித்தார். துணை செயலாளர் ஏ. ஆர். முன்னா ஷெரிப்  வரவேற்றார்.  இதில் சிறப்பு அழைப்பாளராக  தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் P.T.R.பழனிவேல் தியாகராஜன்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  இதில் வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ. பி. நந்தகுமார், மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த எம். பி. ,
மாவட்ட பொருளாளர் எஸ். தாமோதரன், மாநகராட்சி மேயர் சுஜாதா, மாநில அமைப்பு செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் மருத்துவர் வி. எஸ். விஜய் , முன்னாள் எம் எல் ஏ சி. ஞானசேகரன் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக பகுதி கழக செயலாளர் பி. .முருகபெருமாள் நன்றி உரையாற்றினார்.