வெம்பாக்கம் அ.தி.மு.க.,வின் மேற்கு ஒன்றியத்தில் ஜெ.,வின் பிறந்தநாள் விழா : காலை முதல் – இரவு வரை இடைவிடாது அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி !

செய்யாறு, பிப். 25 –
செய்யாறு அடுத்த வெம்பாக்கம்  அ.தி.மு.க.,வின் மேற்கு ஒன்றிய செயலாளர் வயலூர் ராமநாதன் ஏற்பாட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்
78வது பிறந்த நாளையொட்டி காலை முதல் – இரவு வரை பொது மக்களுக்கு அன்னதானம் வாழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்
78வது பிறந்தநாள் விழா நேற்று அ.தி.மு.க., சார்பில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. செய்யாறு சட்டசபை தொகுதிக்குட்பட்ட வெம்பாக்கம் அ.தி.மு.க.,வின் மேற்கு ஒன்றிய செயலாளர் வயலூர் ராமநாதன் ஏற்பாட்டில், வயலூர் கிராம கூட்டு சாலையில் உள்ள அலுவலகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி காலை முதல் – இரவு வரை தொடர்ந்து நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க., பொறுப்பாளர்களான நமண்டி பாலன், பாராசூர் பெருமாள், அருண்,  தவமணி, வெற்றிச்செல்வன், கன்னியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.