வேலூர், பிப். 25-
வேலூர் மாநகர் மாவட்டம், காட்பாடி தெற்கு பகுதி அதிமுக மற்றும் டாக்டர் அம்மா பேரவை சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர் கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க,
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் 78 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா காந்தி நகர் ஓடைபிள்ளையார் கோவில் அருகில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஜெயலலிதாவின் 78ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி டாக்டர் எம். ஜி. ஆர். திருவுருவச்சிலையின் கீழ் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த
டாக்டர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு மற்றும் காலை சிற்றுண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த இருபெரும் விழாக்களுக்கு வேலூர் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சி. பாலாஜி தலைமை வகித்தார். காட்பாடி தெற்கு பகுதி செயலாளர் பேரவை ரவி வரவேற்றார். மாநில அம்மா பேரவை துணை செயலாளர் ஏ. ஏ. தாஸ், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜே. ஜோதி குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே. அமர்நாத் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மாநகர அதிமுக மாவட்ட செயலாளர் எஸ். ஆர். கே .அப்பு மற்றும் அதிமுக மாநில அமைப்பு செயலாளர் வி. ராமு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இந்த விழாவில் எம்ஜிஆரின் திருவுருவச் சிலை மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவப் படம் ஆகியவற்றுக்கு மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தி பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கி மகிழ்ந்தனர்.
இந்த விழாவில் வேலூர் மாநகர் மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் எம். ஆர். ரெட்டி, காட்பாடி ஒன்றிய கழகச் செயலாளர் கே. எஸ். சுபாஷ், பகுதிச் செயலாளர்கள் ஜனார்த்தனன், நாராயணன்,வட்டக் கழக செயலாளர்கள் ந. எழிலரசன், பாஸ்கர், வெங்கடேசன், மாதவன், பாலச்சந்தர், ஐயப்பன், பழனி, கேபிள் சுரேஷ், எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் டி. என். ஜெயகாந்தன் மற்றும் ரத்தத்தின் ரத்தங்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் சி. பாலாஜி வெகு விமரிசையாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகளில் ஒன்றான ஏழை, எளியவர்களுக்கு உணவளித்து அதன் மூலம் மகிழ்ச்சி கொள் என்பதை தாரக மந்திரமாக கொண்டிருந்தனர். அதே வழியில் இன்றைக்கு ஜெ .,பேரவை மாவட்ட இணைச் செயலாளர் சி. பாலாஜி காலை சிற்றுண்டியை பொதுமக்களுக்கும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் சுமார் 500 பேருக்கு வாரி வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த உணவை உண்ட பொதுமக்கள் மற்றும் ஏழை, எளிய, சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற முதியவர்கள் இந்த உணவை வாங்கிக்கொண்டு மகிழ்ந்து தங்களது வாழ்த்துக்களை அதிமுகவினருக்கு தெரிவித்துச் சென்றனர். இதற்கு முன்னதாக கடந்த 23ஆம் தேதி மாலை முதல் இரவு வரை அந்த எம்ஜிஆர் சிலையின் வளைவுகளை மலர்கள் மற்றும் அதிமுக கொடிகளால் அலங்கரித்து அந்த இடத்தை விழாக்கோலம் பூண்டதாக மாற்றியமைத்தார் சி .பாலாஜி. இதுபோன்று வேலூர் மாவட்டத்தில் வேறு எங்கும் மலர்களால் அலங்கரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.











Leave a Reply