குடியாத்தம் வளத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பூட்டியே கிடப்பது ஏன்? பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கேள்வி?

வேலூர், பிப். 24-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம்,  வளத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ளது வளத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம். இந்த வருவாய் ஆய்வாளரின் கீழ் 20 ஊராட்சிகள் மற்றும் குக்கிராமங்கள் அமைந்துள்ளன. பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப பல  வகையான சான்றுகள் பெற கிராம நிர்வாக அலுவலரையும், அடுத்தபடியாக வருவாய் ஆய்வாளரை அணுகி சான்று பெற வேண்டிய நிலை உள்ளது. ஆனால் வளத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. ஆண்டுக்கணக்கில் பூட்டிக் கிடக்கும் இந்த அலுவலகம் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் திறந்தது போல் தெரியவில்லை . ஆனால் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இந்த அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக செயல்படுபவர் வளத்தூர் வருவாய்  ஆய்வாளர் அலுவலகத்திற்கு வருவதே இல்லை. இதனால் இங்கு சான்று பெறவேண்டிய கிராமங்களான அகரம் சேரி, சென்னாச்சேரி உள்ளிட்ட தொலைதூரத்தில் உள்ள ஊராட்சியைச் சேர்ந்த நரிக்குறவர்கள், விவசாயிகள், ஏழை கூலித் தொழிலாளிகள் தினசரி வந்து செல்கின்றனர். ஆனால் அலுவலகம் பூட்டிக் கிடக்கிறது. இந்த அலுவலகத்தை பார்த்து பார்த்து செல்லும் அவல நிலை பொதுமக்களுக்கு தொடர்ந்த வண்ணம் உள்ளது. பிறப்பு மற்றும் இறப்பு மற்றும் இதர சான்றுகள் பெற நேரடியாக வருவாய் ஆய்வாளரை அணுக வேண்டிய நிலை உள்ளதால் இவர் வளத்தூர் பகுதிக்குச் செல்வதே இல்லை. இதற்கு முன்பு இருந்த வருவாய் ஆய்வாளர்கள் பெண் என்றாலும் தினசரி வருவாய் அலுவலர் அலுவலகத்தில் வந்து அமர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று விரைவில் சான்றுகள் பெற நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு நடைமுறையில் இருந்தது. ஆனால் தற்போது வளத்தூர் வருவாய் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக உள்ள நபர் இந்த அலுவலகத்திற்கு வராமலேயே குடியாத்தம் பகுதியில் அமர்ந்து கொண்டு 20 ஊராட்சிகள் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை அலைகழித்து வருவது தொடர்கதையாக உள்ளது. காரணம் இவர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குடியாத்தம் பகுதியில் சொந்தப் பகுதியாக உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தலைமை செயலகத்தில் தனக்கு வேண்டப்பட்ட நபர் உள்ளதால் தன்னை யாரும் ஒன்றும் செய்ய இயலாது, இடமாற்றமும் செய்ய இயலாது தான். இவர் சொல்வது மற்றும் செய்வதுதான் சட்டம். தான் விருப்பப்பட்டால் செய்வது தான் வேலை என பொதுமக்களிடம் மிகவும் ஏளனமாக பேசி வருகிறார். வயது வித்தியாசம் இன்றி வாயா போயா என்று சான்றுகள் பெற வரும் அப்பாவி பொதுமக்களிடம் ஏளனமாக ,தெனாவெட்டாக பேசி வருகிறார். திரைப்படத்தில் வடிவேலு காமெடி போல கிணற்தை காணவில்லை கிணற்றைக் காணவில்லை என்பது போல் வளத்தூர் உள்வட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வருவாய் ஆய்வாளரை காணவில்லை, வருவாய் ஆய்வாளரை காணவில்லை என்று புலம்பக்கூடிய மிகப்பெரிய அவல நிலைதான் தொடர்ந்து உள்ளது. எனவே வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி துறைரீதியான நடவடிக்கைக்கு இவரை உட்படுத்தி உடனடியாக இடமாற்றம் செய்து வளத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள வருவாய் அலுவலகத்தில் தினசரி பொதுமக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பூர்த்தி செய்யக்கூடிய நபரை வருவாய்  ஆய்வாளராக நியமனம் செய்து பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். வருவாய் அலுவலர் எல்லைக்குட்பட்ட வளத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 ஊராட்சி பொதுமக்கள் மற்றும் ஏழை கூலி தொழிலாளிகளின் கோரிக்கையாகவும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகவும் உள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கையை எதிர்பார்த்து பொதுமக்கள் காத்து கொண்டுள்ளனர்.