தமிழ் நாடு தலைகுனியாது திமுகவின் மாபெரும் பொதுக்கூட்டம்!

வேலூர், பிப். 23-
வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, கணியம்பாடி தெற்கு ஒன்றியம் மற்றும் பென்னாத்தூர் பேரூராட்சி திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது மாபெரும் பொதுக்கூட்டம் பேரூராட்சி செயலாளர் பி. அருள்நாதன் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் என்.கஜேந்திரன்  வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி,
வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ. பி. நந்தகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி ,மாவட்ட பொருளாளர் எஸ்.தாமோதரன், பேரூராட்சி தலைவர் பவானி சசிகுமார், துணைத் தலைவர் ஏ. .சத்திய ஜீவா ராஜ் ,
ஒன்றிய செயலாளர் சி. எல்.
ஞானசேகரன், பகுதி செயலாளர் சி. எம். தங்கதுரை ,ஒன்றிய நிர்வாகிகள் ,பேரூராட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்