செந்துறையில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நவீன பயிற்சி முகாம்

அரியலூர் மாவட்டம், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்குள் கால்நடை பராமரிப்பில் புதிய மற்றும் நவீன தொழில் நுட்ப பயிற்சி திட்டம் 2025-2026, கீழ் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவுப்படி மண்டல இணை இயக்குநர் மரு. ராமலிங்கம் வழிகாட்டுதல்படி, துணை இயக்குநர், மரு.முரளிதரன் தலைமையில் மற்றும் உதவி இயக்குநர் உடையார்பாளையம் கோட்டம் மரு. சு.ஆனந்தி முன்னிலையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.இப்பயிற்சியில் 100 க்கும் மேற்பட்ட கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பயன்பெற்றனர். மேலும் இப்பயிற்சியில் இடுபொருட்கள் தாது உப்பு, மண் புழு உரம், தீவன சோளம், பயிற்சி கையேடு வழங்கப்பட்டது.கால்நடை பராமரிப்பு, வளர்ப்பு, நவீன தொழில்நுட்பம், கோடைகாலத்தில் கால்நடை பராமரிப்பு, தூய பால் உற்பத்தி, தொழில்முனைவோர் ஆக வேண்டிய வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இப்பயிற்சி பணிகளை கால்நடை உதவி மருத்துவர்கள் மரு அ.சத்தியமூர்த்தி, மரு. செந்தில், மரு குமார்,
மரு.செ.அறிவுச்செல்வன்,மரு.விஜயராஜ், மரு.பிரேம்குமார்
கால்நடை ஆய்வாளர் சந்திரா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மேற்கொண்டனர்.
பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.