செய்யார் அடுத்துள்ளது ராந்தம் கிராமம். இங்கு புதியதாக கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் தினகரன், ஜே.சி.கே. சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செய்யார் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கலையரங்கத்தை ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து அவர் பேசியதாவது; ‘கிராமப்புறங்களில் அரசால் நேரடியாக செய்ய முடியாத அடிப்படை பணிகளை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்யலாம் என, புது சட்டத்தை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தான். அந்தச் சட்டம் தான் இன்று வரையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு செய்யார் தொகுதியில் இதுவரை 150க்கும் மேற்பட்ட கலையரங்குகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு ஊராட்சியில் கலையரங்கம் கட்டப்படுகிறது என்றால் அதுதான் கடைசி பணியாகும். அதற்கு முன்பு குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளது என, நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாடகக் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய இயக்கம் தி.மு.க., தான். கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில், நாடகத்திற்கும் – நாடகத்தை நடத்தி வரும் கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். வயது முதிர்ந்த நாடக கலைஞர்களுக்கு மாதா மாதம் ஓய்வூதியத்தையும் வழங்கியவர் இவர் தான். இன்றும் இந்த திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது; ‘ இவ்வாறு ஜோதி எம்.எல்.ஏ., பேசினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., அன்பழகன், மூத்த பொறுப்பாளர் சேட்டு, மாவட்ட பிரதிநிதி பெருமாள், பிரகாஷ், எஸ்.எஸ்.குமார், கல்பட்டு பிரகாஷ், குணாநிதி, அவைத்தலைவர் கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.













Leave a Reply