செய்யாறு கலைஞர் சிலை அருகேஆலத்தூர் ஏ.எம்.ஏழுமலை ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கல்!

செய்யாறு, பிப். 21 –
செய்யாறு கலைஞர் சிலை அருகே 45ம் நாளான நேற்று ஆலத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஏ.எம்.ஏழுமலை ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, முன்னாள் எம்.எல்.ஏ., அன்பழகன், ஒன்றிய செயலாளர் ஞானவேல் ஆகியோர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். 
மாவட்ட துணைச் செயலாளர் லோகநாதன், நகர செயலாளர்  விஸ்வநாதன், புரிசை சிவக்குமார், கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து தி.மு.க., பொறுப்பாளர்களான
கலைச்செல்வன், ஹேமச்சந்திரன், குமாரராஜா, மாத்தூர் பாபு, பாலாஜி, ராஜூவ்காந்தி
கோபு, கவுன்சிலர்கள் கோவேந்தன், ரமேஷ், அண்ணாதுரை, சூரிய பிரகாஷ், தர்மலிங்கம்   ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்கள் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினர். அன்னதானத்தை பெற்று கொண்ட பொதுமக்கள் மனதார வாழ்த்து தெரிவித்து விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.