மேட்டுப்பாளையத்தில்முதியோர் இல்லத்திற்கு ரூ.50 லட்சம் நன்கொடை – சமூக ஆர்வலர் ஞானசேகரன் குடும்பத்தாருக்கு பாராட்டு

கோவை மாவட்டம்
மேட்டுப்பாளையம் அருகே ரோட்டரி சங்கம் முன்னெடுத்து வரும் அன்பாலயா முதியோர் இல்லம் கட்டுமானப் பணிக்காக, சமூக ஆர்வலரும் சிக்காரம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான RTN AKS ER S ஞானசேகரன் அவர்களின் சகோதரர் திரு. பழனிச்சாமி அவர்களின் குடும்பத்தார், அவர்களின் அன்பு மகன் லேட் P. சித்தார்த்மௌலி அவர்களின் நினைவாக ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான காசோலையை முதல் கட்டமாக வழங்கியுள்ளனர்.
இந்த நன்கொடை, முதியோர் இல்லத்தின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துவதுடன், ஆதரவற்ற மற்றும் பாதுகாப்பற்ற முதியோர் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் வாழ வழிவகுக்கும் முக்கியமான மனிதநேய உதவியாக கருதப்படுகிறது. சமூக நலனில் அக்கறை கொண்டு வழங்கப்பட்ட இந்த உதவி, பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.
சமூக நலப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஞானசேகரன் அவர்கள் மற்றும் அவரது சகோதரர் பழனிச்சாமி அவர்களின் குடும்பத்தாரின் இந்த மனிதநேய செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். முதியோர் நலனுக்காக அவர்கள் வழங்கிய இந்த பெருந்தொகை உதவி, சமூக பொறுப்புணர்வின் உயர்ந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நம்ம மேட்டுப்பாளையம் சமூக நல குழுவின் ஒருங்கிணைப்பாளர் S. பாஷா அவர்கள், ஞானசேகரன் அவர்கள், பழனிச்சாமி அவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார். மேலும், அவர்களின் சேவை மனப்பான்மை மேலும் பலருக்கு முன்மாதிரியாக அமைய வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.