வேலூர், பிப். 20-
மார்பகப் புற்றுநோயா இனி கவலை இல்லை.
பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் கண்டறியும் அதிநவீன பேருந்து ரோட்டரி மாவட்டம் (3231) சார்பாக குடியாத்தம் அத்தி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை வழங்கப்பட்டது. ரூபாய் ஒரு கோடியே 60 லட்சம் மதிப்பில் தயாரான பேருந்தில் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் அதிநவீன டிஜிட்டல் மெமோகிராஃபி இயந்திரம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் வசதி ஆகியவை உள்ளது. இது 2022-23 ஆம் ஆண்டு ரோட்டரி மாவட்ட ஆளுநராக இருந்த ஜே.கே.என்.பழனி மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய ஏழு வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய கிராமப்புற மக்களின் சிகிச்சைக்கும், நோய் கண்டறிதலுக்கும் இலவசமாக இந்த பேருந்து பணியாற்றும். இதன் மூலம் ஏழைப் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். இந்த பேருந்தினை வியாழக்கிழமை குடியாத்தம் அத்தி மருத்துவமனைக்கு ரோட்டரி சர்வதேச துணைத் தலைவர் (தேர்வு) எம். முருகானந்தம் (MMM) மருத்துவமனை தலைவர் டாக்டர் பி. சௌந்தரராஜனிடம் மேதகு முன்னாள் தெலுங்கானா ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன் முன்னிலையில், மாவட்ட ஆளுநர் வி. சுரேஷ் தலைமையில் ஒப்படைத்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர் டாக்டர். T. D. பாலமுருகன் இத்திட்டத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜே.கே.என். பழனி அனைவரையும் வரவேற்றார். முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் கே. ஜவரிலால் ஜெயின், டி வி பி ஸ்ரீதர், பி. பரணிதரன், வருங்கால ஆளுநர்கள் ரவிக்குமார் மற்றும் சுந்தர்ராஜ், கே .எம் .ஜி.கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே. எம். ஜி. ராஜேந்திரன், மூத்த வழக்கறிஞர் கே.எம்.பூபதி, எம். கோபிநாத் மற்றும் குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவர் கே. சந்திரன், மருத்துவர்கள் S.சுகுமார், MS.திருநாவுக்கரசு, அத்தி மருத்துவக் கல்லூரி முதல்வர் குமரவேல் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் A.கென்னடி நன்றி உரையாற்றினார்.











Leave a Reply