வெம்பாக்கம் அருகே 100 நாள் வேலை செய்யும் மக்களிடம்அ.தி.மு.க.,வினர் துண்டு பிரசுரங்கள் விநியோகம் !செய்யாறு, பிப். 19 -செய்யாறு அடுத்த வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வடகல்பாக்கம், பூனைதாங்கல், மண்ணூர், மேனலூர், சேனையநல்லூர்உள்ளிட்ட கிராமங்களில் 100 நாள் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களிடம் 100 நாள் வேலை செய்யும் பெண்களிடமும், அ.தி.மு.க., சார்பில் அறிவித்துள்ள 10 தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி எடுத்துக் கூறி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.இந்நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திருமூலன் ( எ ) பையாகுட்டி தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் மற்றும் முன்னாள் அமைச்சருமான முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு 100 நாள் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களை நேரில் சந்தித்து அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் செய்த பல்வேறு சாதனைகளைப் பற்றியும் மற்றும் தற்போது கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அறிவித்துள்ள 10 தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றியும் விளக்கிக் கூறினர்.இதில், அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் துரை, ரகு, அசோகன், பி.டி.துரை, அருண், பாராசூர் பெருமாள், தவமணி, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.