பேரணாம்பட்டு பங்களாமேட்டில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

வேலூர்,பிப்.13-
பேரணாம்பட்டு பங்களாமேட்டில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்த பா.ஜ.க., ஒன்றிய பாசிச அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும், பேரணாம்பட்டு ஒன்றிய கிழக்கு மற்றும் மேற்கு தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பொகலூர்  ஜெ. ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். பேரணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கட்சி தலைவர் சா. சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் கா. பா.மறைமலை, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக ஒன்றிய அரசு மற்றும் அதிமுகவை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்தி, மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் எம். டேவிட், வழக்கறிஞர் ஹரிநாத், முனிசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜே. ராஜமாணிக்கம், எஸ். கோமதி சௌந்தரராஜன், எஸ். ஸ்ரீதேவி சோக்கன், சி.அமிலா யுவராஜ் ,ஆர். சங்கீத பிரியா சீனிவாசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஒய் .ஜெயலட்சுமி யுவராஜ், மசிகம் எஸ் .மாலதி, பி. கவிதா டில்லிபாபு, எஸ். ஜீவிதா செந்தில், அழிஞ்சிகுப்பம் என். செந்தில்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த லோகு, திமுகவைச் சேர்ந்த ஆட்டோ என்.ஜெயக்குமார், எ .கெளதமன், டி. அருமைநாயகம் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்