கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்திருந்த தென்னக ரயில்வே பொது மேலாளர்
R.N. சிங்கிடம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக நல அமைப்பினர் இஸ்லாமிய அமைப்பினர் உள்ளிட்டோர் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் மேம்பாடு மற்றும் மேட்டுப்பாளையம் கோவை பயணிகள் மெமோ ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரியும் கூடுதல் முறை இயக்கக் கோரியும்
மேலும் காட்டூர் ரயில்வே கேட்டில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்தும் நேரில் உயர் அதிகாரிகளிடம் எடுத்து கூறினார்கள் உடனடியாக காட்டூர் ரயில் நிலைய பகுதிக்கு ரயில்வே துறை சார்ந்த அதிகாரியை ஆய்வு செய்யக் கூறினார் கார்ட்டூன் ரயில்வே கேட் பகுதியில் நேரடியாக கள ஆய்வு செய்த பின்பு அதிகாரி பொதுமக்கள் கொடுத்த புகார் மனு மீது உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரி கூறினார்
மேலும் நிகழ்வில் மேட்டுப்பாளையம் பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சானவாஸ் ,சாமுவேல் மேட்டுப்பாளையம் முன்னாள் சட்டமன்ற திமுக உறுப்பினர் அருண்குமார், அதிமுக நகர மன்ற உறுப்பினர் சுனில் குமார் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாத் பேரவை முகமது சரீப்,அக்பரலி
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்
ஹனிபா.ஹக்கீம் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்













Leave a Reply