உலகம் உங்கள் கையில்
தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா
வியாழக்கிழமை காலை இரண்டாமாண்டுபட்ட வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரிக் கருத்தரங்கக் கூடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மேட்டுப்பாளையம் நகர்மன்றத் தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி அவர்களும் நகர்மன்றத் துணைத்தலைவர் அருள்வடிவு
முனுசாமி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவ மாணவியருக்கு மடிக்கணினி வழங்கிச் சிறப்பித்தனர். இதன்மூலம் 357 மாணவ மாணவியர் பயனடைந்துள்ளனர்.
கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் ஜெயசங்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழவிற்கு வருகைபுரிந்த அனைவரையும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் செந்தில்குமார் வரவேற்றார் விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர் மெஹரிபா பர்வீன் அவர்கள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் தொலைநோக்குச் சிந்தனையால் இன்று பெண்கள் பெருமளவு கல்வி பெற்று உயர்ந்த நிலையை அடைந்துவருகிறோம் என்று கூறினார். மேலும், தமிழ்நாடு அரசின் கல்வி மேம்பாட்டுக்கான அனைத்து நலத்திட்டங்களையும் மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டு மிகச்சிறந்தவர்களாக மாணவர்கள் உயரவேண்டும் என்றும் மேட்டுப்பாளையத்தில் இயங்கிவரும் அரசின் அறிவுசார் மையத்தை மாணவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து உரையாற்றிய சிறப்பு விருந்தினர் அருள்வடிவு அவர்கள் உரையாற்றுகையில், உலகத்தை உங்கள் கையில் கொண்டுவருவதற்காக அரசு அயராது படுபடுகிறது. அதன் வெளிப்பாடாக இன்று உங்கள் கைகளில் மடிக்கணினி வந்துசேர்ந்துள்ளது. முறையாகப் பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் உச்சங்களை அடையவேண்டும் என்று வாழ்த்தினார் மடிக்கணினியைப் பெற்றுக்கொண்ட மாணவ மாணவியர் தங்களின் மகிழ்வையும் சிறப்பாகப் பயன்படுத்தி முன்னேறுவோம் என்ற உறுதிப்பாட்டையும் தெரிவித்தனர். நிறைவாக பொருளியல் துறைத்தலைவர் முனைவர். தையல் நாயகி நன்றி உரையாற்றினார்











Leave a Reply