செய்யாறு, பிப். 13 –
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்
தமிழகத்தை வஞ்சித்து வரும் பா.ஜ.க., அரசையும்- இதற்கு நிற்கும் அ.தி.மு.க.,வையும் கண்டித்து, செய்யார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 6 இடங்களில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
செய்யாறு அடுத்த பெரும்பள்ளம் கிராமத்தில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி தலைமையிலும்,
செய்யாறு நகரத்திற்கு உட்பட்ட பெரியார் சிலை அருகே நகர செயலாளர் விஸ்வநாதன் தலைமையிலும்,
ராந்தம் கூட்டுரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வெம்பாக்கம் மேற்கு செயலாளர் தினகரன் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோல்,
வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய ஏழாச்சேரி கிராமத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே.கார்த்திகேயன் ஆகியோர் ஏற்பாட்டிலும்,
வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே.சீனுவாசன், மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு தலைவர் பார்வதி ஆகியோர் ஏற்பாட்டிலும், செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே ஒன்றிய செயலாளர் சி.கே.ரவிக்குமார் ஏற்பாட்டிலும் – மத்திய பா.ஜ.க., அரசை கண்டித்தும் அதற்கு துணை நிற்கும் அ.தி.மு.க.,வை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கண்டன கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.












Leave a Reply