வேலூர், பிப். 13-
வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த என்.பி.என்.பாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாகத் தீ பற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிப்காட் பகுதியிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் ஏதும் இல்லை.
இந்த சம்பவம் குறித்து பொன்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Leave a Reply