சென்னை இராயப்பேட்டை அலமேலு மங்கை தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதிமகா கும்பாபிஷேக விழா

         சென்னை ராயப்பேட்டை லாயிட்ஜ் ரோடு, வி பி இராமன் சாலை, வி எம் தெரு சந்திப்பில் உள்ள அலமேலு மங்கை தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.  கோவில் தர்மகர்த்தா ஆர். செல்வகுமார், அரிமா ஆர். துரை ஆகியோர் வேண்டுகோளுக்கு இணங்க,    இத்திருக் கோவிலுக்கு  கருட சேவை வாகனம் உபயம் செய்ததோடு, சிறப்பு விருந்தினராகவும் பிரபல தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலருமான ஆன்மீக வள்ளல் வராகி குரூப் கம்பெனி சேர்மன் வெற்றி வராகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
         விழாவில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீனிவாச பெருமாளின் தரிசனம் பெற்றுச் சென்றனர்.