தென்காசி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மீது நடவடிக்கை பாயுமா?

தென்காசி, பிப். 8-
இந்து சமய அறநிலையத் துறையில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, பகுதிகளில் பணிபுரிந்த இணை ஆணையர் அன்புமணி  மீது பல புகார்கள் பல ஆண்டுகளாக கொடுத்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து இவர் பணியாற்றி வருகிறார். இவர் இந்து சமய அறநிலை துறையின் பெயரை பயன்படுத்தி பல லட்சங்களை வாரி சுற்றியுள்ளதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் நடவடிக்கை என்னமோ எடுக்காமல் அவரை தப்பிக்க விட்டு விட்டு வேடிக்கை பார்க்கிறது இந்து சமய அறநிலையத்துறை என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை . இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தயங்கும் அறநிலையத்துறை இம்முறையாவது தாமதிக்காமல் இவர் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுத்து இவர் அரசுக்கு தெரியாமல் சுருட்டி வைத்துள்ள பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதற்கு உத்தரவிடுவாரா? அல்லது கண்டும் காணாமல் விட்டுவிடுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.