வேலூர், பிப். 8-
வேலூர் அடுத்த இறைவன்காடு ஸ்ரீ வனதுர்கா பீடம் சரஸ்வதி தேவஸ்தானத்தில் வேலூர் வி .வி.கே.என்.எம்.சீனியர் செகண்டரி சிபிஎஸ் பள்ளியில் முழு ஆண்டு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து மாணவச் செல்வங்களுக்கு நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற பிரார்த்தனை செய்யப்பட்டு அவர்களுக்கு ஸ்ரீமகா சரஸ்வதி தேவியின் அருள்பிரசாதமாக எழுதுகோல்கள் மற்றும் பிரசாதங்கள் ஸ்ரீ துர்கா அம்மா மூலமாக ஆசிர்வதித்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது பள்ளி முதல்வர் சுஜாதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











Leave a Reply