மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் 443-வது பிறந்தநாள் விழா தமிழக நாயுடு மகாஜன சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.
சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுருதி ரமேஷ் விழாவிற்கு தலைமை தாங்கினார். விழாவில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நரசிங்க பெருமாள் சிறப்புரை ஆற்றினார்.


விழாவில் சம்பத்ஜி, செந்தில், மாரி, மணிமாறன், மற்றும் இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், தரங்கிணி இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. சுருதி நாராயணன் நடிகர் விஜயகாந்த் வேடத்தில் தோன்றியது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தொலைக்காட்சி புகழ் முத்து முருகன் உள்ளிட்ட கலைஞர்களின் பொழுது போக்கு நிகழ்ச்சியும் இடம் பெற்றது. முன்னதாக அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மன்னர் திருமலை நாயக்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.










Leave a Reply