செய்யாறில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதிசிலை அருகே மாவட்ட அயலக அணி துணைத் தலைவர்எம்.கே.கார்த்திகேயன் ஏற்பாட்டில்அறுசுவையுடன் அன்னதானம் வழங்கல் !

செய்யாறு, பிப். 2 –
செய்யாறு கலைஞர் சிலை அருகே 32ம் நாளான நேற்று மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே.கார்த்திகேயன்
ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் வேல்முருகன், வெங்கடேஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். முன்னாள்  எம்.எல்.ஏ., அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், நகர செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் சி.கே.ரவிக்குமார், தினகரன், மருத்துவர் அணி அமைப்பாளர்
சி.மகேந்திரன், மாவட்ட மகளிர் அணி வளைதள பொறுப்பாளர் ஞானசௌந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து தி.மு.க., பொறுப்பாளர்களான மணிவண்ணன், கலைஞர் பாஸ்கர், துரை, ராணி,
கவுன்சிலர்கள் ரமேஷ், ரவிக்குமார், தர்மலிங்கம் மற்றும் சூரிய பிரகாஷ், பிரபு ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்கள் 1000 பேருக்கு 12  வகை உணவுப் பொருட்கள் அடங்கிய அறுசுவை உணவை அன்னதானமாக வழங்கினர். அன்னதானத்தை வாங்கி உண்ட பொதுமக்கள் இதுபோன்ற ஒரு அன்னதானத்தை நாங்கள் இதுவரை எங்களது வாழ்நாளில் சுவைத்ததே இல்லை என்று தெரிவித்ததுடன் இதுபோன்று ஒரு அன்னதானத்தை வழங்கிய நல் உள்ளங்களுக்கு தங்களது நன்றியையும் காணிக்கையாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.