காட்பாடி அரசு மகளிர் பள்ளியில்உயர்கல்வி கண்காட்சி அரங்கு;உயர்கல்வியே எங்கள் இலக்கு வழிகாட்டி நிகழ்வு!

வேலூர், பிப். 2-
காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உயர்கல்வி வழிகாட்டி திட்டம் 2025-2026 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வியே எங்கள் இலக்கு வழிகாட்டி திட்ட தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார்.  முன்னதாக உதவித் தலைமையாசிரியர் எம்.மாரிமுத்து வரவேற்று பேசினார்.  பள்ளி திட்ட ஒருங்கிணைப்பாளர் முதுகலை ஆசிரியர்கள் எஸ்.பிரேமலதா, எ.ர ஃபீகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் கலந்து கொண்டு பேசினார்.
உயர்கல்வியே எங்கள் இலக்கு திட்டத்தை குறித்தும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தும் முன்னாள் மாணவிகள் வெற்றி பெற்ற வழிகள் குறித்தும் எம்.சித்ராமகேந்திரன், பொதுமருத்துவர் பி.எம்.சீதாலட்சுமி, தெற்கு ரயில்வே அலுவலர் வி.பிராபாவதி, உணவகத்தின் மேற்பார்வையாளர் கே.செல்வி, பள்ளி தாளாளர் எம்.சிவசங்கரி, கூட்டுறவுத்துறையின் எஸ்.ராதிகா, வழக்கறிஞர் கே.கார்த்திகா, ஆசிரியர்கள் முனைவர் எம்.கலைவாணி, புவனேஸ்வரி ஆகியோர் பேசினர்.
உயர்கல்வி கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டு மாணவியர், பெற்றோர்கள் பார்வையிட்டு விவரங்களை குறிப்பெடுத்துக் கொண்டனர்.    மேலும் கனவு சுவர் அமைக்கப்பட்டு அதில் மாணவியர் தங்களின் எதிர்கால படிப்பு மற்றும் திட்டம் குறித்த கனவுகளை பதிவு செய்தனர்.
இந்த நிகழ்வில் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் 247 மாணவிகள் அவர் தம் பெற்றோர்கள், முன்னாள் மாணவிகள், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.