ஆக்சிலியம் கல்லூரியில் மாணவிகளின் பேரவைக் குழு நடத்திய ஆக்சிஸ் -26 நிகழ்ச்சி!

வேலூர்,பிப்.1-
வேலூர் ஆக்சிலியம் கல்லூரியின் மாணவிகளின் பேரவைக்  குழு அக்சிஸ் -26 என்ற நிகழ்வை நடத்தினர். இதில் மாணவிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்கள், வேலூரைச் சார்ந்த தொழில் முனைவோரின் பல பொருட்கள் காட்சிக்காகவும் , விற்பனைக்காகவும் வைக்கப்பட்டது. இதிலிருந்து வரும் வருமானத்தை எச்ஐவி – யால் பாதிக்கப்பட்டோர், கைவிடப்பட்ட குழந்தைகள்,  முதியோர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. கலந்து கொள்வோருக்கு மகிழ்ச்சி, பொழுதுபோக்கு நிறைந்துள்ள ஸ்டால்கள் உள்ளன. சமுதாயத்திற்கு சேவை செய்யும் நோக்கில் நிகழ்த்தப்படும் நிகழ்வு.
சிறப்பு விருந்தினராக “எல்லோ படத்தின் கதாநாயகர் வைபவ் முருகேசன்’  கலந்து கொண்டார்.
இந்நிகழ்விற்கு கல்லூரிச் செயலர் முனைவர் அருட்சகோதரி ஆ. மேரி ஜோஸ்பின் ராணி  அமலா அவர்களும் பிரதான தாங்கினார் . கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி அ. ஆரோக்கிய ஜெயசீலி வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர்  சகோபிரதானவும், அவர்/// தேர்வாணையர், முனைவர் சகோ. வின்சி மற்றும்  IQAC ஒருங்கிணைப்பாளர் முனைவர் சகோ. சகாய மேரி அவர்களும் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்ச்சியினை சுழற்சி -1 மாணவித் தலைவி ரோஸ்லின் அவர்களும் சுழற்சி – II மாணவித் தலைவி சிஸ்மோண்டி சமம் ஒருங்கிணைத்தார்கள். இதில் 4000 த்திற்கும் மேற்பட்ட மாணவிகள், முன்னாள் மாணவிகள், பெண்கள் கலந்து கொண்டனர்.