வேலூர், ஜன. 27-
காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் 77வது குடியரசு தின விழா 26.01.2026 அன்று காலை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சங்கத்தின் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி முன்னிலை வகித்தார். வேலூர் மாநகராட்சியின் 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா தேசிய கொடியினை ஏற்றிவைத்து 35 தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு வரவேற்று பேசினார். மாவட்ட மேலாண்மைக்குழு உறுப்பினர் ஆர்.சீனிவசன், போக்குவரத்து குழும துணைத்தலைவர் எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், திட்ட அலுவலர் பி.என்.ராமச்சந்திரன், ஆர்.சுதாகர், மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களுக்கான மேற்பார்வையாளர் நந்தகுமார், பிரபு , ஜி.பிரேம்குமார், எம்.தினேஷ் உள்ளிட்டோர் பேசினர்.
காட்பாடி துளிர் பள்ளியில் 77வது குடியரசு தின விழா
காட்பாடி காந்திநகர் துளிர் பள்ளியில் 77வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை த.கனகா தலைமை தாங்கினார். மக்கள் நலச்சந்தையின் ஒருங்கிணைப்பாளர் கு.செந்தமிழ்செல்வன் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். அறிவியல் இயக்க செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், அறங்காவலர்கள் வி.பழனி, ஆசிரியர்கள் சே.சித்ரா, மலர்கொடி, பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
காட்பாடி காந்திநகர் கிளை நூலகத்தில் 77வது குடியரசு தின விழா
மாவட்ட கிளை நூலகமான காட்பாடி காந்திநகர் அறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் 77வது குடியரசு தின விழா நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் வி.பழனி தலைமையில் துணைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனனன், ஆர்.விஜயகுமாரி ஆகியோர் முன்னிலையில் கிளை நூலகர் தி.மஞ்சுளா தேசிய கொடியேற்றினார்.












Leave a Reply