வேலூர்,ஜன.27-
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராம ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் தலைமை வகித்தார். செயலர் நீலமேகம் வரவேற்றார். கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் பேசுகையில்: 100 நாள் வேலை திட்டம் இன்று 125 நாட்களாக உயர்த்தி தரப்பட்டுள்ளது. இதில் சுழற்சி முறையில் 20 /20 நபர்களாக பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். ராகவேந்திரா நகர் பகுதியில் உள்ள கால்வாய் பிரச்சனை முற்றிலுமாக தீர்க்கப்படும் என்றார். தெரு மின்விளக்குகள் எரியாத விளக்குகள் உடனடியாக போர்க்கால் அடிப்படையில் சரி செய்து தரப்படும் மற்றும் பொது இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்க அனுமதி தரவில்லை என்றும் அவர் அப்போது தெரிவித்தார். குறிப்பாக கிராம வளர்ச்சிக்கு உண்டான அனைத்து பணிகளையும் வண்டறந்தாங்கள் ஊராட்சி செய்து வருகிறது என்று பெருமிதம் கொண்டார். குறிப்பாக ஆண்களை விட பெண் பார்வையாளர்கள் அதிகளவு கலந்து கொண்டனர். அனைவருக்கும் தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.











Leave a Reply