வேலூர்,ஜன.27-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், மாச்சம்பட்டு ஊராட்சி மன்ற பொதுமக்கள், குடியரசு தின கிராம சபாவுக்கு வராத ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தியை கண்டித்து திடீர் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். இதையறிந்து அந்த இடத்தில் பத்திரிக்கையாளர்களும், அரசு அதிகாரிகளும் குவிந்தனர். அப்போது பொதுமக்கள் தரப்பிலிருந்து மாச்சம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவராக ஜெயந்தி என்று பதவி ஏற்றாரோ அன்றிலிருந்து இன்று வரை ஜெயந்திக்கு பதிலாக ஜெயந்தியின் கணவரான கோதண்டன் என்பவர் அத்துமீறி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குச் சென்று ஜெயந்தி அமரும் இருக்கையில் அமர்ந்து பணிகளை கவனித்து வந்தார். ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி தனது பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்யும் வகையில் தனக்கு பதிலாக தனது கணவனான கோதண்டனை தனது இருக்கையில் அமர்த்தி வேடிக்கைப் பார்க்கிறார். மேலும் இதைப் பயன்படுத்திக்கொண்ட, கோதண்டன் ஒரு சில தில்லுமுல்லு வேலைகளை செய்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் குளறுபடி செய்வதாகவும், செய்யாத ஒரு சில வேலைகளை செய்துவிட்டதாக பொய்யான கணக்குகளை எழுதச் சொல்லி ஒருசில லகரங்களை அழுக்கி விட்டதாகவும், மாச்சம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்களாக கோதண்டராம ரெட்டியாரும், கால்நடை மருத்துவர் பாபுவும் பல வருடங்கள் ஊராட்சி மன்ற தலைவர்களாக இருந்த போது மாச்சம்பட்டு ஊராட்சி பொதுமக்களின் தேவைகளையும், குறைகளையும் அவ்வப்போது தீர்த்து வைத்தனர். ஆனால். ஜெயந்தி என்று ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றாரோ, அன்றிலிருந்து மாச்சம்பட்டு ஊராட்சிக்குப் பிடித்தது சனியன். மாச்சம்பட்டு ஊராட்சியில் எத்தனை தெருக்கள் உள்ளது என்பதை சொல்லிவிட்டாலே ஜெயந்தியை பாராட்டிவிடலாம். ஆனால் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஜெயந்தி வருவதே இல்லை. அதைப்போலத்தான் குடியரசு சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு ஜெயந்தி வராததால்தான் நாங்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எந்த எதிர்ப்பார்ப்பையும் பாராமல் மனிதர்களுக்கு வானம் மழையை தருகிறது. மரம் பழத்தையும், நிழலையும் தருகிறது. மனிதர்களின் உடைகளை வெளுக்க மனிதர்களின் உடைகளை கழுதை தனது முதுகில் பாரமாக சுமந்து செல்கிறது. ஜெயந்தியை நம்பி ஓட்டுபோட்ட மாச்சம்பட்டு ஊராட்சி மக்களுக்கு ஜெயந்தி ஒன்றுமே செய்யவில்லை என்றெல்லாம் பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இறுதியில் ஒன்றிய ஆணையர் கெளரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபானந்தராஜ் ஆகியோர் பொதுமக்களை சமாதனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.












Leave a Reply