வேலூர் , ஜன. 27-
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவை முன்னிட்டு காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் வண்ணக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு பிரமாண்டமாக காட்சியளித்தது. இதையடுத்து காலை 8.30 மணி அளவில் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த எளிய விழாவில் காட்பாடி வட்டத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.











Leave a Reply