வேலூர், ஜன.24-
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் சார்பில், காட்பாடி காவல்துறை துணை கண்காணிப்பாளராக புதியதாக பொறுப்பேற்றுள்ள விஜயகுமாரை, அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்று, வாழ்த்துகளை தெரிவித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன், மேலாண்மைக்குழு உறுப்பினர் எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், பி.என்.ராமச்சந்திரன், செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது காட்பாடியில் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக உள்ளது. இதனை விரைந்து சீரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் சில மாற்றங்கள் மேற்கொள்ள ஆய்வு செய்யப்படுவதாகவும், அதன் பிறகு ரெட்கிராஸ் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளிடம் கருத்துக்களை கேட்டறிந்து போக்குவரத்தை சீரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். மேலும் தடம் எண்.1 மற்றும் 2 ஆகிய நகர பேருந்துகள் காந்திநகர் உள்ளே சென்று வருவதில்லை என்று கூறியபோது இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Leave a Reply