பேரணாம்பட்டில் குடியிருப்பு பகுதிகளுக்கு எதிராக இயங்கி வரும் மினா, கடுக்கா கம்பெனி மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

வேலூர்,ஜன.23-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வி.கே.சாலையில் உள்ள எல்.ஆர்.நகரில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புக்கு அருகில் மினா, கடுக்கா கம்பெனி  இயங்கி வருகிறது. இந்த கடுக்கா கம்பெனியில் தினமும் கடுக்காய்கள் அறைக்கப்படுகிறது. இப்படி அறைக்கப்படும் கடுக்காய் தூள் குடியிருப்பு வாசிகளின் குடிநீர் தொட்டிகளிலும், சாப்பிடும் சாப்பாட்டிலும் சென்று படிவமாக விழுவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் குடியிருப்புவாசிகளுக்கு, மிகவும் தொல்லையாக உள்ளது. மேலும் இந்த கடுக்காய் கம்பெனியிலிருந்து செம்மண் கலரில் ஒரு விதமான கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவுநீரால் மத்தூர், மசிகம், பாலூர், ஓணாங்குட்டை போன்ற பகுதிகளில் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. இப்படியாக பல உயிர்களின் உயிருக்கு இடையூறு செய்யும் செயலாக மினா, கடுக்கா கம்பெனி நிர்வாகம் தொடர்ந்து செய்து வருகிறது என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அடுத்தவர்களின் வயிறை எரிய வைத்துவிட்டுத்தான் மினா, கடுக்கா கம்பெனி நிர்வாகத்தினர் தங்களது பசியைப் போக்கிக்கொள்ள வேண்டுமா? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்தக் கொடுமை ஒரு நாளைக்கோ, ஒரு வாரத்திற்கோ, ஒரு மாதத்திற்கோ, நடைபெறவில்லை என்றும், வருடக்கணக்கில் இந்தக் கொடுமை தொடர்வதாகவும், இதனால் மிகவும் ஆவேசமடைந்த, இப்பகுதி மக்கள் ஒரு கட்டத்தில், மினா கடுக்கா கம்பெனியின் உரிமையாளரை கன்னத்தில  பளார் பளார் என்று அறைந்துவிட்டு அவரின் முகத்தில், காரித்துப்பிவிட்டு வந்ததாகவும், பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள், இதுகுறித்து, உடனே நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு, தொல்லையாக செயல்படும், மினா கடுக்கா கம்பெனிக்கு, தடை விதிக்க வேண்டும் என்பதே எல்.ஆர்.நகர் பொதுமக்களின், எதிர்ப்பார்ப்பாக உள்ளது…