வேலூர் ஜன 21

வேலூர் மாவட்டம் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் மாவட்ட செயலாளர் ச. கௌரி, மாநில செயலாளர் ராமு மற்றும் சங்கத்தினர் சேர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர் மனுவில் கூறியதாவது:-
வேலூர்,விழுப்புரம் கடலூர், தஞ்சாவூர் ம மயிலாடுதுறை என பல மாவட்டங்களில் கிராவல் மணல்,பர்மிட் மூலம் செம்மண் கடத்தலில் தமிழகம் முழுவதும் வாரிகளில் மணல் கடத்தல் செய்யும் ஓம் சக்தி புரோமோட்டர்ஸ் உரிமையாளர் ராஜப்பா என்பவர் மீது சட்ட நடவடிக்கையும், மணல் கொள்ளையில் ஏற்கனவே 4730 கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்ததாக மத்திய அமலாக்கத்துறையால் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்ட எஸ் ஆர் என்கிற ராமச்சந்திரன் நிறுவனத்திற்கு மூன்று மாவட்டங்களில் ஆற்று மணல் அள்ள அனுமதி தந்திருக்கிறது.
அரசு அதை உடனடியாக ரத்து செய்து அரசே மணல் குவாரியை ஏற்று நடத்தவேண்டும்.
மேலும் தமிழகத்தில் கிரஷர்கள் 2555 போலியாக இயங்குகிறது, அனைத்து கிரஷர்களும் உடனடியாக சீல் வைக்கப்பட வேண்டும் எனவும் அந்த மனுவில்
கூறப்பட்டுள்ளது.இதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.










Leave a Reply