தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு பாராட்டு விழா எடுத்த கிராம மக்கள் !

காஞ்சிபுரம், அக். 19 –
காஞ்சிபுரம் அடுத்த
தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமாரின் பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா எடுத்தனர்.
விழாவில், தலைவர் ஆற்றிய நெகிழ்ச்சியான ஏற்புரையைக் கேட்டு, பெண்கள் மற்றும் முதியவர்கள் கண்ணீர் மல்க கதறி அழுது அவரை வழியனுப்பிய காட்சி அங்கிருந்த அனைவரையும் நெஞ்சுருகச் செய்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சியின் தலைவராக கடந்த 2021 அக்டோபர் 20 அன்று பொறுப்பேற்ற அஜய்குமாரின் 5 ஆண்டுகள் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதையொட்டி, தேவரியம்பாக்கம் மற்றும் தோணாங்குளம் கிராமப் பொதுமக்கள், இளைஞர்கள் சார்பில் அவருக்குப் பாராட்டு விழாவை நடத்தினர்.
தலைவர் முயற்சியால் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வந்தது, அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்தது,
தரிசு மற்றும் பொது நிலங்களில் 27 ஆயிரம் மரக்கன்றுகள், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகள் நட்டு பசுமைப் புரட்சி ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கிராம மக்கள் மூலம் நினைவுக்கு கொண்டு வரப்பட்டது.
5 ஆண்டுகள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நின்று கிராமத்திற்குப் பல்வேறு நலத் திட்டங்களையும், அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்த தலைவர் அஜய்குமார் விடைபெறுவதைக் கண்ட கிராம மக்கள் உணர்ச்சிவசப்பட்டு மேடையிலேயே கதறி அழுதனர். தலைவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.