கோயம்புத்தூர் வி .தி.லீடர்ஸ் அரசியல் பயிற்சி ஆலோசனை வகுப்பில் செய்யாறு பொறுப்பாளர்கள் பங்கேற்பு !

செய்யாறு, அக். 17 –
கோயம்புத்தூரில் வி .தி.லீடர்ஸ் சார்பில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறம் மற்றும் அரசியல் மையத்தில் பொறுப்பாளர் களுக்கான பயிற்சிக்கான ஆலோசனை விழாவில், செய்யாறைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் வி. தி. லீடர்ஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. போதை – கஞ்சா ஆகியவை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். நாடு வெப்பமாவதை தடுக்கும் வகையில் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் ஆகியவற்றை இந்த அமைப்பு கையில் எடுத்து பொறுப்பாளர்களுடன் – பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கோயம்புத்தூரில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அறம் மற்றும் அரசியல் மையத்தில் அண்ணாமலை தலைமையில், வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் அரசியல், அது தொடர்பான சட்ட திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையில் முறையான பயிற்சி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் செய்யாறை சேர்ந்த பொறுப்பாளர்களான ஜெ.வெங்கடேசன், ஆ. சரவணன், பி. அருள், ஜெ.சக்தி நாராயணன், எம். அன்பழகன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இளைஞர்களின் தலைமைத்துவம், அறம் மற்றும் அரசியல் விழிப்புணர்வை மேம்படுத்தும் இம்முயற்சியின் ஆலோசனை கூட்டம் பொதுச்சேவைக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.