காட்பாடி மதிகிருஷ்ணாபுரம் தேவாலய கட்டுமானப் பணியில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு – தீயணைப்பு வீரர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!

வேலூர், அக். 8-
வேலூர் சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. காட்பாடி தாலுகா, மதிகிருஷ்ணாபுரம், கே.கே.நகர் பகுதியில் கிறிஸ்துவ தேவாலய கட்டட பணிகள் நடந்தது. அப்போது, திடீரென கட்டடம் சரிந்தது. இந்த நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 நபர்களை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் உயிருடன் மீட்டனர். இதையடுத்து, மீட்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ், தீயணைப்பு படை வீரர்களின் சிறப்பான பணிகளுக்கு வாழ்த்து தெரிவித்து, கௌரவித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
வேலூர் மாவட்டத்தின் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் தீயணைப்பு நிலைய அலுவலர் நா.பாலாஜி, முதுநிலை தீயணைப்பு அலுவலர் க.பார்த்திபன், தீயணைப்பு அலுவலர்கள் ஆ.குமரேசன், தே.குமரன், வி.தீரன், ப.அருண்ராஜ் மற்றும் சு.பிரகாஷ் உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்களின் சிறப்பான பணியை பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.