
வேட்டைக்கு சென்ற இருவர் கைது: இரண்டு நாட்டு துப்பாக்கிகள், 26 தோட்டாக்கள் பறிமுதல்வேலூர், ஜூன் 8-வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே வனவிலங்குகளை சிலர் வேட்டையாடுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் மேல்பட்டி காவல் துறையினர் குடியாத்தம் அருகே உள்ள வனப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க இருவர் நாட்டுத் துப்பாக்கிகளுடன் திரிந்து கொண்டிருந்தனர். இவர்களை பின்தொடர்ந்து சென்ற காவல் துறையினர் அவர்களை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அவர்கள் வன விலங்குகளை வேட்டையாடச் சென்றது உறுதி யானது. இதை தொடர்ந்து காவல் துறையினர் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அத்துடன் அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட கொண்டு வந்த இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 26 தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










Leave a Reply