பழங்குடியின மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கிய சமூக சேவகர்!வேலூர், ஜூன் 8-வேலூர் மாவட்டம், குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட காளியம்மன்பட்டி சாமியார் மலையில் உள்ள அன்னை சோனியா காந்தி நகரில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களைச் சார்ந்த 35 மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.காளியம்மன்பட்டி இளைஞர்கள் சார்பில் ஆண்டுதோறும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.இதன்படி, காளியம்மன்பட்டி அன்னை சோனியா காந்தி நகரில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த 35 மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா 7.6.2026 அன்று நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை சமூக ஊடகங்களில் கல்வி, வேலைவாய்ப்பு விழிப்புணர்வு தகவல்களை அளித்து வரும் சமூக சேவகர் தி. நந்தகுமார் வழங்கி வாழ்த்தி பேசினார்.