கோவை மாவட்டம் சூலூர் பகுதியில், 10 வயது சிறுமி கொடூரமான முறையில்
சடலமாக மீட்க பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில், உள்ள பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த 5 ம் வகுப்பு மாணவி 21/5/2026 ம் தேதி திடீர்னு காண வில்லை,பெற்றோர்கள், உறவினர், மற்றும் நண்பர்கள் பல வீட்டில், பல பகுதிகளில் தேடியும் கிடைக்காமல், சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.புகாரின் அடிப்படையில் காவல் துறை தீவிர தேடுதலில், 22 /5/2026 ம் தேதி மாலை சம்பவம் நடந்த இடத்திற்கு 2 கி. மீ. தொலைவில் உள்ள கண்ணம் பாளையம் குளத்தில் சடலம் மீட்கப் பட்டு, உடல் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்ப பட்டு உள்ளது. இந்த சம்பவம் சூலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனைத்து பெற்றோர்களுக்கும் மிகப்பெரிய ஒரு பயத்தையும் அச்சத்தையும் உருவாக்கி உள்ளது. பெண் குழந்தைகளை எப்படி பாதுகாப்பு பண்ணுவது என்று மிகப் பெரிய வேதனையுடன் தெரிவித்துள்ளார்கள். ஆதலால் சிறுமியின் கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையாக தண்டனை வழங்க உரிய ஏற்பாடுகள் செய்தும், மேலும் பெண்களுடைய பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாக உருவாகி வருகிறது உங்களை அனைத்தும் போதைப் பழக்கம் உள்ள நபர்கள் தான் இது போன்ற மிகப்பெரிய தவறுகளை கண்மூடித்தனமாக செய்கிறார்கள். ஆதலால் ஆட்சிகள் மாறினாலும் இன்னும் காட்சிகள் மாறாமல் குற்றச்செயல்கள் நடைபெற்று வருகிறது. போர்க்கால அடிப்படையில் தமிழக முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீர இந்து சேவா இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.










Leave a Reply