காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 13வது முறையாக போட்டியிடும்  மாஜி அமைச்சர் துரைமுருகன்!

வேலூர், மார்ச் 31-
காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 13 வது முறையாக போட்டியிடும்  திமுக வேட்பாளர் துரைமுருகன் சித்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்த பின்னர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார் – விஜய்யை தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. நான் மீண்டும் காட்பாடியில் போட்டியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது. நான் என் தொகுதிக்கு என்னென்ன செய்தேன் என்பது மக்களுக்கு தெரியும் என பேட்டியளித்தார்.
வேலூர் மாவட்டம், ,காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் 30ம் தேதி ரயில் மூலம் சென்னையிலிருந்து காட்பாடிக்கு வந்தார்.
அவருக்கு திமுக தேமுதிக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
அங்கிருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த துரைமுருகன் சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் துணை மேயர் சுனில்குமார், வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
   மக்களிடையே திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசுகையில், இந்த வாக்காளர்கள் தெய்வங்களுக்கு நன்றி. மீண்டும் எனக்கு காட்பாடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளனர். மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு முறையும் எனக்கு ஆதரவளித்து வாக்களிக்கிறீர்கள் .இம்முறை வாக்களியுங்கள் என பேசினார்.
பின்னர் துரைமுருகன் கூறுகையில், நான் மீண்டும் காட்பாடியில் போட்டியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது. நான் என் தொகுதிக்கு என்னென்ன செய்தேன் என்பது மக்களுக்கு தெரியும்.
நான் வெற்றி பெற்ற பின்னர் தொகுதிக்கு செய்ய சில திட்டங்களை வைத்துள்ளேன். வெற்றி பெற்ற பின்னர் அவைகளை செய்வேன். விஜய் திமுக தேர்தல் அறிக்கை உடைந்த கண்ணாடி, கிழிந்த துணி என கூறியது குறித்து கேட்டதற்கு விஜய்யை நான் தலைவராகவே ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னார்.