செய்யாறு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்தமிழ்ச்செல்வன் மனுத்தாக்கல் !

செய்யாறு, மார்ச் 31 –
செய்யாறு சட்டசபை தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வன் தேர்தல் நடத்தும் அலுவலரான அம்பிகா ஜெயினிடம் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
செய்யாறு சட்டசபை தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணி நேற்று தொடங்கியது. செய்யாறு சட்டசபை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் தமிழ்ச்செல்வன் வயது 25. இவர், செய்யாறு சட்டசபை தொகுதிக்குட்பட்ட குத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் முருகன். விவசாய கூலித் தொழில் செய்து வருகிறார். தமிழ்ச்செல்வன் பி.ஏ., பட்டமும், எல்.எல்.பி., படித்துவிட்டு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நேற்று செய்யாறு பஸ் நிலையத்தில் இருந்து, 10 கூத்துக் கலைஞர்கள் வேடமிட்டு, நடனமாடியவாறும் மேள தாளங்கள் முழங்க வேட்பாளர் தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சியின் தொகுதி மண்டல செயலாளர் சுகுமார் தலைமையில், தனது வேட்பு மனுவை, சப் – கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, தேர்தல் நடத்தும் அலுவலரும் ,சப் – கலெக்டருமான அம்பிகா ஜெயினிடம் தாக்கல் செய்தார்.
வேட்பாளருடன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர்பாசறை மாநில ஒருங்கிணைப் பாளர்களான ராஜசேகர், ராகவன், கதிரவன், பஞ்சமூர்த்தி ஆனந்தராஜ் மற்றும் மாநில சுற்றுச்சூழல் பாசறை, தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர்களும், தொகுதி தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் உடன் சென்றனர். முன்னதாக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் இங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.