செய்யாறு தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஜோதிபொறுப்பாளர்களின் வீடுகளுக்கு சென்று ஆலோசனை !

செய்யாறு, மார்ச் 31 –
செய்யாறு சட்டசபை தொகுதிக்கு தி.மு.க., சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ.,வும் வேட்பாளருமான ஜோதி நேற்று காலை முதல் – மாலை வரை தி.மு.க., பொறுப்பாளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வாழ்த்து பெற்று – ஆலோசனை நடத்தினார்.

செய்யாறு சட்டசபை தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ., ஜோதி களம் இறக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று தங்களது கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மூத்த பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களிடம் வாழ்த்து பெற்று – ஓட்டுக்கள் சேகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். தன்னை மீண்டும் வெற்றி பெறச் செய்யுமாறு சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கியும் கேட்டுக் கொண்டார்.
இந்த வரிசையில்,  வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் ஏளச்சேரி எம்.கே.கார்த்திகேயன், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் மாமண்டூர் ராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே. சீனுவாசன், வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன் ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று வாழ்த்து பெற்றார். இவர்களுடன் வாக்குகள் சேகரிப்பது குறித்து, வேட்பாளர் ஜோதி ஆலோசனை நடத்தினர். கூட்டணி கட்சிகளை சேர்ந்த பொறுப்பாளர்களை இன்று ( 31ம் தேதி ) சந்திக்க உள்ளார்.