தமிழ்நாடு விஸ்வகர்மா நண்பர்கள் நலச் சங்கத்தின் சார்பில்ஏகாம்பரநாதர் ஆலயத்தில் 63 நாயன்மார்கள் உற்சவத்தை முன்னிட்டு அன்னதானம்!

வேலூர், மார்ச் 29-
தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கத்தின் சார்பில்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலய பங்குனி உத்திர திருவிழாவின்
6ம் நாள் 63 நாயன்மார்கள் உற்சவத்தை முன்னிட்டு
19ஆம் ஆண்டு அன்னதானம்!
வேலூர், மார்ச் 29-
தமிழ்நாடு விஸ்வகர்மா நண்பர்கள் நலச் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட கிளையின் சார்பாக  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலய    பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாள்  63 நாயன்மார்கள் உற்சவத்தை முன்னிட்டு 19ஆம் ஆண்டு அன்னதான விழா காஞ்சிபுரம்  நகர பத்தர் 16 கால் மண்டப சத்திரத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன்  தலைமை தாங்கி அன்னதானத்தினை தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட குழுவின் ஆர்.குமாரசாமி,க.சங்கரநாராயணன், எஸ்.சிவக்குமார் ஆகியோர்  அன்னதானம் வழங்கும் பணியினை               மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் ஜி.கருணாகரன்,  குப்புசாமி, என்.ராஜேந்திரன், என்.அருண்குமார், ஜி.நரசிம்மன்,  எம்.சீனிவாசன் ஆகியோர்  அன்னதானம் வழங்கும் பணியினை ஒருங்கிணைத்தனர்.  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.ஆர்.பி.சதீஷ்,                                        டி. எம்.கதிர்வேலு,  டி.கே.ஜி. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவின் 6ம் நாள் ஆண்டுதோறும் நடைபெறும் 63 நாயன்மார்களுக்கான விழாவில் பங்கேற்க வந்த பக்தர்கள் ஆயிரம்  பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.