ஓய்வு பெறும் சமூக நீதி விடுதி சமையலர் ஜெ.சங்கருக்கு ராணிப்பேட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் துணை ஆட்சியர் டி.மீனா பாராட்டு!வேலூர், மார்ச் 28-தமிழ்நாடு அரசின் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறையின் கீழ் இயங்கும் சமூக நீதி விடுதியின் சமையலர் ஜெ.சங்கர் 31.03.2026ல் பணி நிறைவு பெறுவதை முன்னிட்டு 27.3.2026 அன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் மாவட்ட நல அலுவலர் துணை ஆட்சியர் டி.மீனா பாராட்டு கேடயம் வழங்கி பாராட்டினார்.மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு துணை ஆட்சியர் டி.மீனா தலைமை தாங்கி, பணி நிறைவு பெறும் ஜெ.சங்கர் ஆற்றிய பணிகளை பாராட்டி கேடயம் வழங்கி பேசினார்.ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் தலைவருமான முனைவர். செ.நா.ஜனார்த்தனன் சால்வை அணிவித்து பாராட்டினார்.சமையலர் சங்க தலைவர் ஜி.வெங்கடேசன், பொருளாளர் பரிமளா மற்றும் உடன் பணிபுரிந்த சமையலர்கள் மற்றும் காவலர்கள் பாராட்டி பேசினர். முன்னதாக காப்பாளர் எம்.எம்.ஞானசேகரன் நிகழ்வினை ஒருங்கிணைத்தார். காப்பாளர்கள் எஸ்.அன்பரசு, டி.ஹரி, எஸ்.இ.ஏழுமலை, காளினிகள் ஜி.மஞ்சுளா, வி.டில்லிபாய், அனிதா, ஓய்வுபெற்ற வேளாண் துறை கண்காணிப்பாளர் ஜெ.சந்திரன், கூட்டுறவுத்துறை ஓய்வுபெற்ற செயலாளர் ஜெ.திருநாவுக்கரசு, ஜெ.பாபு, ஆட்சியர் அலுவலக இந்தியன் வங்கி நகை மதிப்பீட்டாளர் ஜெ.ஆறுமுகம், காளிகாம்பாள் அறக்கட்டளை தலைவர் பாலகுமார், சி.விஸ்வநாதன், சி.சதீஸ், வஞ்சூர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் சால்வை அணிவித்து பாராட்டி பேசினர்.பணிநிறைவு பெறும் ஜெ.சங்கர் ஏற்புரை வழங்கினார். முடிவில் எஸ்.தேன்மொழி. எஸ்.மகாலட்சுமி, எஸ்.பாலாஜி, எஸ்.ச சி குமார் ஆகியோர் நன்றி கூறினர்.