காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பறவை காய்ச்சல் சோதனை சாவடியில் ஹாயாக அமர்ந்து கொண்டு நேரத்தை கடத்தும் பணியாளர்கள்!

வேலூர், ஏப். 2-
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் மோட்டார் வாகன சோதனைச் சாவடி இயங்கி வருகிறது. இந்த சோதனைச் சாவடியை ஒட்டி வனத்துறை சோதனைச் சாவடியும் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த சோதனைச் சாவடி அருகில் வனத்துறை சோதனை சாவடிக்கு பக்கத்தில் பறவை காய்ச்சலுக்கான சோதனைச் சாவடி தற்காலிகமாக செயல்பட்டு  வருகிறது. இந்த சோதனைச் சாவடியில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் ஹாயாக அமர்ந்து கொண்டு நேரத்தை வீணடித்து வருவதுடன் தங்களது வேலை நேரம் முடிந்ததும் வீட்டிற்கு செல்வதிலேயே குறியாக இருக்கின்றனர். தங்களுக்கு அளித்த பணியை கடமையாக கருதி செய்ய தவறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பறவை காய்ச்சல் என்பது பக்கத்து மாநிலமான ஆந்திர மாநிலம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து அதில் திரவங்களை பீய்ச்சி அடித்து அதற்கு பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும் என்பது இவர்களுக்கு அளிக்கப்பட்ட பணி. ஆனால் இந்த பணியை மறந்து, கடமையையும் மறந்து ஏதோ தங்கள் விருப்பம் போல் பணியாற்றி வருகின்றனர் என்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. இதனால் பறவை காய்ச்சல் தமிழகப் பகுதியில் பரவுவதற்கு உண்டான அனைத்து சாத்தியக்கூறுகளும் சூழ்நிலையும் ஏற்படுத்திக் கொடுக்கும் அளவிற்கு இவர்களது பணி மிகவும் அவலமாக, கேவலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு இடத்தில் இறக்கி போட்டு அமர்ந்து கொண்டு டீ குடிப்பது காஃபி அருந்துவது தின்பண்டங்களை தின்பது என்று நாளடைவில் அவர்கள் நேரத்தை கழித்துவிட்டு வீட்டிற்கு செல்வதிலேயே குறியாக இருக்கின்றனர். கோழி மற்றும் காடை உள்ளிட்ட பறவை இனங்கள் தமிழக எல்லைக்குள் ஆந்திர பகுதியில் இருந்து சர்வ சாதாரணமாக நுழைய தொடங்கியுள்ளது மிகவும் அபாயகரமானது. அசாதாரண சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது வெட்கப்பட வேண்டிய விஷயம் வேதனைக்குரிய விஷயமாக மாறி உள்ளது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் உடனடியாக 1.4.2026 அன்று நண்பகல்  12 மணி அளவில் பணியில் இருந்த இரண்டு பெண் பணியாளர்கள்  மீது உடனடியாக அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பினாலும் தகும் அந்த அளவிற்கு அவர்களது பணி மிகவும் படு மோசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மீது சட்டப்படியான துறை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க கால்நடைத்துறை முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் ,பொதுமக்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இது போன்ற பணியாளர்களை பணிக்கு இங்கு அமர்த்தாமல் கடமையை தவறாது செய்யும் பணியாளர்களை இங்கு அமர்த்தி ஆந்திர எல்லையில் இருந்து வரும் வாகனங்களை குறிப்பாக உன்னிப்பாக கவனித்து கரைசலை தெளித்து தமிழ்நாடு எல்லை உள்ளே அனுப்ப வேண்டிய பணிகளை நிரந்தரமாக செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக மாறி உள்ளது. ஆக மொத்தத்தில் கடமையை சரியாக செய்யும் பணியாளர்களை இங்கு பணிக்கு அமர்த்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக மாறி உள்ளது. இதனை கால்நடைத்துறையும் மாவட்ட நிர்வாகமும் விசாரித்து உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .இப்படி கடமை தவறிய பணியாளர்கள் மீது கால்நடை துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.