காஞ்சிபுரம், ஏப். 2 –
தமிழகத்தில் இன்னும் 40 நாட்களில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் பத்திரிக்கை யாளர்களுக்கு மீண்டும் வீட்டு மனைகள் வழங்கப்படும் என, காஞ்சிபுரம் சட்டமனாறத் தொகுதியின் அ.தி.மு.க., வேட்பாளர் வி.சோமசுந்தரம் நிருபர்களிடம் உறுதியளித்தார்.
காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., – தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளும் நேரடியாக களம் காண்கிறது. அ.தி.மு.க., வேட்பாளர் வி.சோமசுந்தரம் நிருபர்களை நேற்று சந்தித்து தொகுதியின் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; ‘செய்தியாளர் களுக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் அ.தி.மு.க., ஆட்சியில் தான் உரிய மரியாதை கொடுக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் பணியாற்றி வரும் அனைத்து பத்திரிக்கை யாளர்களுக்கும் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில்தான் மாவட்ட கலெக்டர் மூலமாக இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டது. இந்த வீட்டுமனைகளில் செய்தியாளர்களாகிய நீங்கள் வீடுகளை கட்டுவதற்கான தயார் நிலையில் இருந்தீர்கள்.
கடந்த 2021ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் அமர்ந்ததும். உங்களது அனைத்து வீட்டு மனைகளையும் ரத்து செய்து விட்டது. இது எந்த விதத்தில் நியாயம். எனவே, நாங்கள் இன்னும் 40 நாட்களில் ஆட்சியை அமைத்ததும், பத்திரிக்கையாளர்களாகிய உங்கள் அனைவருக்கும் இலவச வீட்டுமனைகள் நல்ல இடத்தை தேர்வு செய்து வழங்குவேன் என, உங்களிடம் உறுதியளிக்கிறேன்.
காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் முக்கியபிரச்சனையாகவே இருந்து வருகிறது. காஞ்சிபுரம் நகரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் புதிய பஸ் நிலையம் அமைந்துவிட்டால், இங்கு போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இந்த பணியை அ.தி.மு.க., ஆட்சிதான் செய்து முடிக்கும். இதேபோல் காஞ்சிபுரத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும். போதைப் பொருளான கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க அதிரடி நடவடிக்கையும் எடுக்கப்படும். நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை முடிவுக்கு கொண்டு வரப்படும். விவசாயிகள் நிறைந்த காஞ்சிபுரத்தில் 5 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கொண்டு வருவேன். இவ்வாறு அ.தி.மு.க., வேட்பாளர் வி.சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.












Leave a Reply