Archives
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Uncategorized
பங்குனி மாத கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
ஆலங்குளத்தில் மனோஜ்பாண்டியனுக்கு சீட்டா?திமுகவினர் புலம்பல்!தென்காசி, மார்ச் 24-திமுகவில் தென்காசி தெற்கு மாவட்டத்தில் இருந்த ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக வசதிக்காக அம்பாசமுத்திரம் தொகுதியுடன் இணைத்து புதியதாக திருநெல்வேலி மேற்கு மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதன் மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் நியமிக்கப்பட்டார்.இந்த புதிய மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு ஆலங்குளம் தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், கட்சியினர் கட்சி பணிகள் குறித்தோ, பல்வேறு தேவைகள் குறித்தோ மாவட்ட கழக பொறுப்பாளரை அடிக்கடி சந்திக்க முடியாத நிலை இருப்பதாகவும், தொகுதியில் கழக நிர்வாகிகள் இல்ல இன்ப, துன்பநிகழ்வுகளுக்கு கூட மாவட்ட பொறுப்பாளர் வராமல் இருப்பதால் மிகுந்த சோர்வில் இருந்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவரும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, ஓ.பி.எஸ். தலைமையிலான அணியில் இருந்து, திமுகவுக்கு எதிராக பணியாற்றியவருமான மனோஜ்பாண்டியன் திமுகவில் இணைந்ததும், அவருக்கு தலைமை காட்டும் முக்கியத்துவத்தால் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கடும் அப்செட்டில் இருந்து வருகின்றனர்.இந்நிலையில், நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் எனக்குத் தான் சீட்டுனு மனோஜ்பாண்டியன் சொல்லித் திரிவதால் கழக உடன்பிறப்புகள் கடும் வருத்தத்திலும், அதிருப்தியிலும் இருக்கின்றனர். கடந்த தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவருக்கு, இந்த தேர்தலில் நாம் எப்படி வேலை பார்ப்பது என புலம்புகின்றனர். மேலும் அவர் கட்சி மாறி வந்த போதிலும் அவர் மட்டுமே வந்துள்ளார். அவரை நம்பி அதிமுகவில் இருந்தோ, ஓ.பி.எஸ்.அணியில் இருந்தோ சொல்லிக்கொள்ளும் படி எவரும் திமுகவுக்கு வரவில்லை. இது தவிர அவர் திமுகவில் இணைந்த பிறகு கூட கழகத்தினரை அனுசரித்துப் போகவில்லை. அவர் கூட இருக்கும் ஒரு சிலர் (அதிமுகவில் இருந்து வந்தர்கள்) மட்டும் வைத்துக் கொண்டுதான் அரசியல் செய்து வருகிறார். இவர் திமுக வேட்பாளராக இருந்தால் தி.மு.க விற்கு மிகப் பெரிய பின்னடைவு ஆகும் என புலம்புகின்றனர். இந்த பலவீனத்தை வைத்து அ.தி.மு.க வும், பாஜகவும் ஈஸியாக ஜெயிக்கலாம்னு ஆலங்குளம் தொகுதியை கண்வைத்து காய் நகர்த்துவதாக உடன்பிறப்புகள் கவலை கொள்கின்றனர்.முதலில் ஆலங்குளம் தொகுதிக்கு சம்பந்தமில்லாத மாவட்ட பொறுப்பாளர் நியமிக்கப்பட்டார். தற்போது கட்சிக்கும், தொகுதிக்கும் சம்பந்தமில்லாத மனோஜ் பாண்டியன் வேட்பாளர் என்பதை ஏற்றுக்கொள்ள விரும்பாத கழக உடன்பிறப்புகள் நாங்கள் அனாதை ஆகிவிட்டோம் என்று புலம்புவதை காண முடிகிறது,திமுக தலைவர் மக்கள் விரும்புகிறவர்களே திமுக வேட்பாளராக இருப்பார் என அறிவித்த நிலையில், மனோஜ் பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அவர் மக்கள் மட்டுமின்றி கட்சிக்காரர்களும் விரும்பாத வேட்பாளராகவே இருப்பார் என்றும், நீண்ட காலம் கழக பணியாற்றியவர், அனைத்து தரப்பு மக்களிடம் செல்வாக்கு மிக்கவர், இளைஞர்களை ஆதரவாக கொண்டவர், கழக நிர்வாகிகளை அனுசரித்து செல்பவர்கள், கழகக் கொள்கை வழி நடப்பவர், கழக நிர்வாகிகளின் இன்ப, துன்பங்களில் பங்கு கொள்பவரை வேட்பாளராக நிறுத்தினால் மட்டுமே ஆலங்குளம் தி.மு.க.கோட்டையாக ஆகும் என திமுகவினர் கூறுகின்றனர்.
கோவையில்
பேரணாம்பட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா: இர. அருள் எஸ். ஸ்டாலின் செல்வராஜ் பங்கேற்பு!
செய்யாறில் தி.மு.க., சார்பில் சுவர் விளம்பரம் தயார் ?பூர்த்தி செய்ய வேண்டிய வேட்பாளர் எம்.கே.கார்த்திகேயனா ?
காலந்தோறும் கார்ல் மார்க்ஸ்!
‘போதையால் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் சீரழித்து விடும்’ !செய்யாறில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்துருவன் செல்வமணி ஆவேசம் !
காட்பாடி அருகே காட்டு யானைகள் அட்டகாசம் – வனத்துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!
குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை!வேலூர், மார்ச் 22-21.03.2026 ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது.இந்த சிறப்பு தொழுகையில் அதிமுக நகர செயலாளர் ஜே. கே. என். பழனி, மாவட்ட கழக துணைச் செயலாளர் கஸ்பா ஆர்.மூர்த்தி ஆகியோர் இஸ்லாமிய பெருமக்களுடன் தொழுகையில் கலந்து கொண்டு ஹபீப் டானிங் பேக்டரி, எஸ். பீடி குழுமத்தின் ஆலி ஜனாப் ஏ.முகம்மது ஆமின்சாஹிப்,, ஏ.முகம்மது அசரப், ஏ. முகம்மது, ரகுமான் ஆகியோருக்கு சால்வை அணிவித்து ஒருவரையொருவர் ஆர கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும் நகர மன்ற துணைத்தலைவர் எம்.பூங்கொடி மூர்த்தி, எஸ். ஐ. அன்வர் பாஷா, வி. இ. கருணா, ஆர்.ரவிச்சந்திரன், எல். ஏ. அன்பழகன், ஏ.சிட்டிபாபு,கோல்ட் வி. குமரன், டிஷ் மோகன், பரமாத்மா, தீனதயாளன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்யாறு அடுத்த அனக்காவூர் அ.தி.மு.க., மேற்கு ஒன்றியத்தில்15 வாக்குறுதிகள் குறித்து துண்டு பிரசுரங்கள் கிராம மக்களுக்கு வழங்கல்!செய்யாறு, மார்ச் 22 -செய்யாறு அருகே சட்டமன்றதேர்தலையொட்டி அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த முதற்கட்ட 15 தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு அதிமுகவினர் வழங்கினர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அனக்காவூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனக்காவூர், அத்திகுளம், விநாயகபுரம் உள்ளிட்ட கிராமபொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி அனக்காவூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் செய்யாற்றை வென்றான் துரை ஏற்பாட்டில் நடந்தது.நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் மற்றும் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு வீடு வீடாகச் சென்று அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க., நிர்வாகிகளான அரங்கநாதன், சேகர், நகர செயலாளர் வெங்கடேசன், ஜனார்த்தனன், பூக்கடை கோபால், கோவிந்தராஜ், சுரேஷ், கன்னியப்பன், பொன்னுரங்கம், வெங்கடேஷ், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
1
2
3
…
65
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.